பி.எட்., எம்.எட். தேர்விற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் பிரச்சனை… மாணவர்கள் திணறல்!
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தால் நடைபெற உள்ள பி.எட்., எம்.எட். தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வுக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், பல மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர் என்று சமீபத்தில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முயன்றபோது இணையதள சர்வர் மெதுவாக செயல்படுவதால் அவர்கள் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். சர்வர் செயல்பாட்டு சிக்கல் காரணமாக சிலர் தங்களது ஹால் டிக்கெட்டை பெற முடியாமல் திணறுவதாக கூறி வருகின்றனர்.
இத்தகைய பிரச்னை காரணமாக தேர்வுகள் திட்டமிடப்பட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி கூட மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பி.எட்., எம்.எட். தேர்வுகள் வரவிருக்கும் 11-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் சர்வர் கோளாறை உடனடியாக சரி செய்வதில் நடவடிக்கை எடுக்க வேண்டியதாக மாணவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய முடியாததால் தேர்வு நுழைவுத் தடை ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!