undefined

பெங்களூரில் மெட்ரோ பணியின்போது ராட்சத கிரேன் கவிழ்ந்து விபத்து - நூலிழையில் உயிர்தப்பிய டிரைவர்!

 

பெங்களூரு சில்க் போர்டு முதல் சர்வதேச விமான நிலையம் வரையிலான நீல நிறப் பாதை (Blue Line) மெட்ரோ பணிகளின் போது, அகரா (Agara) பகுதியில் நேற்று ராட்சத கிரேன் விழுந்து விபத்திற்குள்ளானது. 

நேற்று அதிகாலை சுமார் 3:45 மணியளவில், மெட்ரோ தூண்களுக்கு இடையே இரும்பு கார்டர்களை பொருத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. சுமார் 100 டன் எடையுள்ள ராட்சத இரும்பு கார்டரை 500 டன் திறன் கொண்ட கிரேன் தூக்கியபோது, அதன் நிலைப்புத்தன்மைக்காகப் பயன்படுத்தப்படும் 4 ஜாக்குகளில் ஒன்று திடீரென துண்டிக்கப்பட்டது. ஒரு பக்கம் பிடி இழந்ததால், ராட்சத கிரேன் அப்படியே ஒருபுறமாகச் சரிந்து கவிழ்ந்தது. இதில் கிரேனின் முன்பகுதி அந்தரத்தில் தூக்கியது.

கிரேன் கவிழ்வதைக் கண்ட டிரைவர், மின்னல் வேகத்தில் கீழே குதித்து உயிர் தப்பினார். அதிகாலை நேரம் என்பதால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் மிகப்பெரிய உயிரிழப்போ அல்லது பொதுச் சொத்து சேதமோ தவிர்க்கப்பட்டது.

பெங்களூரு மெட்ரோ பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக இத்தகைய விபத்துகள் தொடர்ந்து வருகின்றன. முன்னதாக நாகவரா பகுதியில் மெட்ரோ தூண் சரிந்து தாய் மற்றும் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த அகரா - வெளிவட்டச் சாலை பகுதியில் போக்குவரத்தை சீர்செய்ய எச்.எஸ்.ஆர் லேஅவுட் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து, கவிழ்ந்த கிரேனை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

பி.எம்.ஆர்.சி.எல் அதிகாரிகள் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இயந்திரத்தின் பராமரிப்பு குறைபாடா அல்லது கவனக்குறைவா என்பது குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!