பெர்லின் திரைப்பட விழா... தமிழ்நாட்டு இயக்குநரின் அறிமுக படம் தேர்வு!
ஜெர்மனியில் நடைபெறும் 76வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் ஃபோரம் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிமுக இயக்குநர் இரா. கௌதம் இயக்கிய “சிக்கலான குடும்பத்தின் உறுப்பினர்கள்” திரைப்படம் தேர்வாகியுள்ளது. இது தமிழ்நாட்டைச் சேர்ந்த இயக்குநரின் முதல் படமாக பெர்லின் திரைப்பட விழாவிற்குத் தேர்வு ஆகும். முன்பு அலைபாயுதே, பருத்திவீரன், கொட்டுக்காளி ஆகிய படங்கள் இந்த பிரிவில் தேர்வு அடைந்திருப்பதால், இது நான்காவது திரைப்படமாகும்.
இந்த படத்தை தமிழரசன் காளிதாஸ் நிறுவனத்தின் லேப்ரிந்த் நரேடிவ்ஸ் தயாரித்துள்ளது. “கூழாங்கல்” படத்தினால் கவனம் பெற்ற நடிகர் கறுத்தடையான் மற்றும் கூத்துப்பட்டறைக் கலைஞர் ஆ.ரா. அஜித்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடன் அறிமுக நடிகர்கள் காஞ்சனா செந்தில், டி. பன்னீர்செல்வம், சரவண சித்தார்த் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சித்தார்த் கதிர், படத் தொகுப்பும் ஒலிக்கலவையும் கணேஷ் நந்தகுமார் பாண்டியராஜூ செய்துள்ளார்.
பெர்லின் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில், “ஒரு இளைஞன் சிறுவயதில் இறந்துவிடுகிறான். அனைவரின் இயல்பு வாழ்க்கையையும் உலுக்கும் மரணமாக அது அமைகிறது. இறுதிச் சடங்கு நடக்கும்போதும் பெருமளவில் துக்கம் இல்லை; மாறாக குடும்ப உறுப்பினர்களின் வன்முறையே தென்படுகிறது. ஓர் அறிமுக இயக்குநரின் அருமையான முயற்சி” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விழா பிப்ரவரி 12 முதல் 22 வரை நடைபெற உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!