undefined

உஷார்... நெல்லையில் வனஸ்பதி கலந்த 1,000 கிலோ போலி அல்வா பறிமுதல், 6 கடைகளுக்கு சீல்!

 

உலகப் புகழ் பெற்ற திருநெல்வேலி அல்வா என்ற பெயரில் நெல்லையில் பல கடைகளில் தரமற்ற அல்வா விற்பனை செய்யப்படுவதாகத் தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், உணவுத்துறை அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) நெல்லையப்பர் கோயில் மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அதிர்ச்சிகரமான மோசடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெல்லை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தலைமையில் நடந்த இந்தச் சோதனையில், பல கடைகளில் 'சுத்தமான நெய் அல்வா' என்று லேபிள்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. ஆனால், உண்மையில் அவர்கள் வெறும் நெய்யை மட்டும் பயன்படுத்தாமல், அதனுடன் வனஸ்பதி (டால்டா), கடலை எண்ணெய் அல்லது ரீஃபைண்டு ஆயில் ஆகியவற்றைக் கலந்து அல்வா தயாரித்தது நிரூபணமானது.

வனஸ்பதி மற்றும் கலப்பட எண்ணெய் கலந்த பின் அதை 'நெய் அல்வா' என்று விற்பது சட்டப்படி குற்றம் என அதிகாரி எச்சரித்துள்ளார். மேலும், புகழ்பெற்ற 'இருட்டுக்கடை அல்வா' கடைக்கு அருகிலேயே, வாடிக்கையாளர்களைக் குழப்பும் வகையில் பெயர் பலகை வைத்து, அது பிரபல கடை என்று மக்களை நம்பவைக்க முயன்ற கடை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை மீறியதாகக் மொத்தம் 6 கடைகள் பூட்டிச் சீல் வைக்கப்பட்டுள்ளன. நெல்லையப்பர் கோவில் பகுதியில் ஒரு பெரிய கடை மற்றும் மூன்று சிறிய கடைகள் என நான்கு கடைகளும், ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு பெரிய கடை மற்றும் ஒரு சிறிய கடையுமாகச் சீல் வைக்கப்பட்டன. இந்தச் சோதனையின் போது ஒரு டன் (1,000 கிலோ) கலப்பட அல்வா பறிமுதல் செய்யப்பட்டது.

அத்துடன், "100% நேச்சுரல்", "சுத்தமான நெய்" போன்ற விதிமீறல் வாசகங்கள் அடங்கிய 25 கிலோ லேபிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இனி கடைகளில் 'அல்வா' என்று மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும், கலப்பட எண்ணெய் பயன்படுத்தினால் அதைப் பிரதான லேபிளிலேயே தெளிவாக அச்சிட்டிருக்க வேண்டும் என்றும், தவறுகளை மறைக்க ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது எனவும் அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!