உஷார்.. தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் மூடப்படும் அபாயம்!
மக்களே உங்கள் வங்கி பண பரிவர்த்தனைகளுக்கான மாற்று ஏற்பாடு செய்துக்கோங்க. வருடத்தின் முதல் மாதத்திலேயே வங்கிகள் அதிக நாட்கள் மூடப்படுகின்றன. இந்த மாதத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள், பொங்கல் திருநாள், சங்கராந்தி, குடியரசு தினம் என்று அதிக நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
வங்கிகளில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாடு முழுவதும் வரும் ஜனவரி 27ம் தேதி ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (UFBU) வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள தொடர் விடுமுறையுடன் சேர்த்து வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஜனவரி 24ம் தேதி சனிக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை தினம். அடுத்த தினமான ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தோடு, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் என்பதால் அன்றைய தினமும் விடுமுறையாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஜனவரி 27ம் தேதி வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் காரணமாக அன்றும் வங்கிகள் செயல்படாது. எனவே ஜனவரி 24ம் தேதி முதல் ஜனவரி 27 வரை தொடர்ந்து வங்கிகள் 4 தினங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்பதால் பண பரிவர்த்தனைகளை முறையாக திட்டமிட்டுக்கோங்க.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!