undefined

உஷார்... பாதயாத்திரை சென்ற பக்தர் சிறுத்தை தாக்கி பலி; இருசக்கர வாகனங்களுக்குத் தடை!

 

தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாதேஸ்வரன் மலைக் கோயிலுக்குச் செல்லும் வனப்பாதையில் பாதையாத்திரை சென்ற பக்தர் சிறுத்தைத் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் சீரனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் (30) என்ற இளைஞர், தனது குழுவினருடன் மாதேஸ்வரன் மலைக்கு பாதயாத்திரை வந்து கொண்டிருந்தார்.

நேற்று மாலை வனப்பகுதியில் நடந்து சென்றபோது, மறைந்திருந்த சிறுத்தை திடீரென பிரவீன் மீது பாய்ந்து அவரை வனப்பகுதிக்குள் கடித்து இழுத்துச் சென்றது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், பிரவீனின் உடல் அடர்ந்த வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டது.

பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி, மாதேஸ்வரன் மலை வனப்பகுதியில் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனங்களில் செல்வதற்கும் சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம் 3 நாட்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது. கோயிலுக்கு 17 கி.மீ. முன்பாக உள்ள தலபெட்டா பகுதியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் முகாமிட்டு, இருசக்கர வாகனங்களைத் தடுத்துத் திருப்பி அனுப்பி வருகின்றனர். பாதயாத்திரை வந்த பக்தர்கள் பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மேட்டூரில் இருந்து மைசூர் செல்லும் பிரதான சாலை இது என்பதால், தமிழகத்தைச் சேர்ந்த இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் ராமாபுரம், பர்கூர், அந்தியூர் வழியாகப் பல கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!