உஷார்... சென்னையில் 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

 

சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்காக, நகரின் முக்கிய பகுதிகளில் நாளை, நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. 

நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள பிரதான குடிநீர் குழாய்களை இடமாற்றம் செய்து, புதிய குழாய்களுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

நாளை ஜனவரி 30, காலை 10:00 மணி முதல் ஜனவரி 31, காலை 10 மணி. வரையில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். சென்னை மாநகராட்சியின் மூன்று முக்கிய மண்டலங்களில் மண்டலம் 9 (தேனாம்பேட்டை) நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், கோபாலபுரம், சி.ஐ.டி காலனி, நந்தனம், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம் (சில பகுதிகள்), தியாகராய நகர் மற்றும் மயிலாப்பூர். 109 முதல் 113, 117, 118, 119, 121, 122 மற்றும் 123 வார்டுகளிலும், மண்டலம் 10 (கோடம்பாக்கம்) வடபழனி (சில பகுதிகள்), மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை மற்றும் சி.ஐ.டி நகர் பகுதிகளில் 130 முதல் 134, 140, 141 மற்றும் 142 வார்டுகளிலும், மண்டலம் 13 (அடையாறு) சைதாப்பேட்டைக்கு உட்பட்ட சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.

குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் காலங்களில் பொதுமக்கள் சிரமமின்றி இருக்க சென்னை குடிநீர் வாரியம் சில வழிமுறைகளை வழங்கியுள்ளது: பொதுமக்கள் இன்று இரவே தங்களுக்குத் தேவையான அளவு குடிநீரைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற விரும்புவோர், வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cmwssb.tn.gov.in மூலம் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கும், தெருக்களில் உள்ள பொதுத் தொட்டிகளுக்கும் லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எவ்வித தடையுமின்றி வழக்கம் போல் நடைபெறும். மெட்ரோ ரயில் பணிகள் விரைவாக முடிவடைய வேண்டிய கட்டாயத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!