undefined

உஷார்... குடலைத் தின்னும் மைதா... பரோட்டா சாப்பிட்டால் குடல் புற்றுநோய் அபாயம் - மருத்துவர்கள் எச்சரிக்கை!

 

தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் மிகவும் பிரபலமான உணவாக பரோட்டா இருந்தாலும், அதனைத் தொடர்ந்து உட்கொள்வது ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக அமையும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

மைதா மாவு என்பது கோதுமையிலிருந்து தவிடு மற்றும் நார்ச்சத்து நீக்கப்பட்டு, ரசாயனங்கள் மூலம் வெண்மையாக்கப்படும் ஒரு பொருளாகும். மைதாவை மென்மையாக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை ரசாயனம், இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரக்கும் செல்களைப் பாதித்துச் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

மைதாவில் சுத்தமாக நார்ச்சத்து இல்லாததால், அது குடலில் ஒட்டிக்கொண்டு செரிமான மண்டலத்தைச் சீர்குலைக்கிறது. தொடர்ந்து பரோட்டா போன்ற மைதா உணவுகளைச் சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை மருத்துவர்கள் விளக்குகின்றனர். நார்ச்சத்து இல்லாததால் ஏற்படும் நீண்டகால மலச்சிக்கல், குடலில் கழிவுகள் தேங்கக் காரணமாகிறது.

குடலில் நீண்ட நேரம் தங்கும் செரிக்காத மைதா கழிவுகள், காலப்போக்கில் குடல் சுவர்களில் வீக்கத்தை ஏற்படுத்திப் புற்றுநோய் செல்கள் வளரச் சாதகமான சூழலை உருவாக்குகின்றன. அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி, மலத்தில் ரத்தம், காரணமில்லாத உடல் எடை குறைவு போன்றவை குடல் புற்றுநோயின் ஆரம்பக்கால அறிகுறிகளாக இருக்கலாம்.

மைதா உணவுகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து, தொப்பை மற்றும் உடல் பருமனை உண்டாக்குகிறது. ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதற்கு மைதா ஒரு முக்கியக் காரணமாகிறது, இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.

பரோட்டாவிற்குப் பதில் கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தி அல்லது முழு தானிய உணவுகளை உட்கொள்ளலாம். தவிர்க்க முடியாத பட்சத்தில், பரோட்டா சாப்பிடும்போது அதனுடன் அதிகப்படியான காய்கறிகள் கலந்த சால்னாவைச் சேர்த்துக் கொள்வது ஓரளவுக்குச் செரிமானத்திற்கு உதவும். மாதம் ஒருமுறை எனப் பரோட்டா சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!