உஷார்.. தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்... தடுப்பூசி அவசியம் மக்களே!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் இந்தப் பாதிப்புகளுக்கு எளிதில் ஆளாவதால், தற்காத்துக் கொள்ள முகக்கவசம் மற்றும் தடுப்பூசி அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொது நல மருத்துவ நிபுணர் இது குறித்துக் கூறுகையில், தொற்று பாதிப்புகள்: ஆர்எஸ்வி (RSV) எனப்படும் சுவாசப் பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா (Influenza) சார்ந்த பிரச்சினைகளின் தாக்கம், எதிர்ப்பாற்றல் குறைந்தவர்களுக்கு மிக அதிகமாக உள்ளது. மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமல், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது. தேவைப்பட்டால் எக்ஸ்-ரே, சளி, ரத்தப் பரிசோதனை மேற்கொண்டு நிமோனியா அல்லது வேறு பாதிப்புகள் உள்ளதா என்பதைக் கண்டறிவது அவசியம். முதியவர்கள், இணைநோயாளிகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசம் அணிவது மிக அவசியம்.
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர்கள், குழந்தைகளுக்கான ஆலோசனைகள் குறித்து கூறுகையில், பருவநிலை மாறும்போது காய்ச்சல், சளி, தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பை உருவாக்கக்கூடிய தொற்றுகள் அதிகரிப்பது இயல்பு. இந்த ஆண்டும் ஆர்எஸ்வி, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்கள் மற்றும் டெங்கு காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல் (சால்மோனெல்லா டைஃபி பாக்டீரியா மூலம்) பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன.
காய்ச்சிய நீரையே பருக வேண்டும். கொசுக்கள் கடிக்காதவாறு முழுமையாக மூடிய ஆடைகளை அணிதல் அவசியம். தரமற்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசித் தவணைகளைத் தவறவிடக் கூடாது. கூட்டமான இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
எனவே பொதுமக்கள் மற்றும் குறிப்பாகப் பெற்றோர்கள் விழிப்புடன் இருந்து, தொற்றுப் பரவாமல் தடுக்கப் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!