undefined

உஷார்... அடுத்த 2 நாட்களுக்கு நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி எச்சரிக்கை - வடகிழக்குப் பருவமழை விலகுகிறது!

 

தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜனவரி 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், குளிர் காலத்தின் தாக்கம் மலைப்பகுதிகளில் தீவிரமடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வெப்பநிலை வழக்கத்தை விடக் குறையக்கூடும். கடந்த சில மாதங்களாகப் பெய்து வந்த வடகிழக்குப் பருவமழை, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் மற்றும் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து முழுமையாக விலகுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது.

ஜனவரி 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும். அதிகாலை வேளைகளில் லேசான பனிமூட்டம் காணப்படலாம். குமரிக்கடல் பகுதிகளில் தற்போது ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் நகரின் சில இடங்களில் லேசான பனிமூட்டம் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!