undefined

உஷார்... தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

 

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. தற்போது கேரள கடலோரத்திற்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், தென் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை ஜனவரி 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

31ம் தேதி மற்றும் பிப்ரவரி 1ம் தேதி மீண்டும் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதனால் இந்த இரு தினங்கள்லும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!