உஷார்... இனி இதெல்லாம் இல்லைன்னா உங்க காரை விற்கவே முடியாது.. அமலுக்கு வரும் புதிய நடைமுறை!
வாகன உரிமையாளர்கள் மற்றும் கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு! தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும்போது வசூலிக்கப்படும் சுங்கக் கட்டண விதிகளில் மத்திய அரசு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இனி சுங்கக் கட்டண பாக்கி இருந்தால், உங்கள் வாகனத்தைச் சட்டப்பூர்வமாக விற்பனை செய்யவோ அல்லது வேறு மாநிலத்திற்கு மாற்றவோ முடியாது.
1. வாகன உரிமை மாற்றத்திற்குத் தடை
புதிய விதிமுறைகளின்படி, ஒரு வாகனத்தின் மீது சுங்கக் கட்டண நிலுவை (Toll Dues) இருந்தால், அந்த வாகனத்தின் உரிமையை (RC Transfer) வேறொரு நபருக்கு மாற்ற முடியாது. சுங்கக் கட்டணம் என்பது அரசுக்குச் சேர வேண்டிய வருவாய் என்பதால், அதனை முழுமையாகச் செலுத்தி 'கிளியரன்ஸ்' பெற்றால் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO) பெயர் மாற்ற அனுமதி வழங்கும்.
2. NOC பெறுவதில் சிக்கல்
நீங்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யும்போது, உங்கள் வாகனத்திற்கான தடையின்மை சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயம். இனி, நிலுவையில் உள்ள அனைத்து சுங்கக் கட்டணங்களையும் செலுத்தி முடிக்கும் வரை, அந்த வாகனத்திற்கு NOC வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. படிவம் 28-ல் (Form 28) புதிய மாற்றம்
வாகன விற்பனை மற்றும் இடமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் படிவம் 28-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன: வாகன உரிமையாளர் தனது வாகனத்திற்கு எவ்வித சுங்கக் கட்டண பாக்கியும் இல்லை என இதில் உறுதி அளிக்க வேண்டும். ஒருவேளை பாக்கி இருந்தால், அதற்கான முழு விவரங்களையும் அதில் குறிப்பிட வேண்டும். இப்போது 'பரிவாஹன்' இணையதளம் மூலமாகவே உங்கள் வாகனத்தின் சுங்கக் கட்டண நிலுவைகளைச் சரிபார்க்கும் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு தற்போது 'ஜிபிஎஸ்' (GPS) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த சுங்க வசூல் முறையை நோக்கி நகர்ந்து வருகிறது. பாஸ்டாக் (FASTag) மற்றும் நம்பர் பிளேட் கண்டறியும் கேமராக்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்போது, சில சமயம் கணக்கில் போதிய பணம் இல்லாததால் கட்டணம் நிலுவையில் விழுகிறது.
இத்தகைய நிலுவைத் தொகையை வாகன உரிமையாளர்களிடம் இருந்து வசூலிப்பது அரசுக்குச் சவாலாக உள்ளது. இதனைத் தவிர்க்கவே, வாகன விற்பனை மற்றும் எஃப்சி (FC) போன்ற அத்தியாவசியப் பணிகளுடன் சுங்கக் கட்டணத்தைச் சுட்டி காட்டியுள்ளது.
உங்கள் ஃபாஸ்டாக் கணக்கில் எப்போதும் போதிய அளவு இருப்பை பராமரிக்கவும். சுங்கக் கட்டணம் தொடர்பான எஸ்எம்எஸ் (SMS) அல்லது மின்னஞ்சல் அறிவிப்புகளை அலட்சியப்படுத்த வேண்டாம். உங்கள் வாகனத்தை விற்கும் முன்பே, 'மாலி' ஆப் அல்லது ஃபாஸ்டாக் இணையதளத்தில் எவ்வித நிலுவைத் தொகையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பிப்ரவரி 1 முதல் ஃபாஸ்டாக் பெறுவதற்கு KYC தேவையில்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பழைய வாகனங்களை அழிக்கும் 'ஸ்கிராப்பேஜ் கொள்கை' இந்த ஆண்டு முதல் தீவிரப்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய விதிகள் சுங்க வரி வசூலை 100% உறுதி செய்யவும், டிஜிட்டல் முறையை வலுப்படுத்தவும் உதவும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!