undefined

உஷார்... சென்னையை நோக்கி நகரும் தாழ்வு மண்டலம் - ஜன.10, 11ல் அதீத கனமழை!

 

வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் தாழ்வு மண்டலமாக மாறி, தமிழகக் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் பல மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' (Red Alert) விடுக்கப்பட வாய்ப்புள்ளது.

ஜனவரி 9ம் தேதி : மழை ஆட்டம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும். ராமநாதபுரம் முதல் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஜனவரி 10ம் தேதி மிக முக்கிய நாள்): தாழ்வு மண்டலம் கடற்கரைக்கு மிக அருகில் வருவதால், தமிழகக் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.

கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி 11ம் தேதி மழை மேகங்கள் வட தமிழகத்தை நோக்கி நகரும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!