உஷார்.. மார்ச் 18 தான் கடைசி தேதி... வளர்ப்பு மாடுகளுக்கு உரிமம் பெறாதவர்களுக்கு அபராதம்!

 

தமிழகம் முழுவதும் நாய்க்கடிக்கு  உள்ளாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் நாய்க்கடி காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அடுத்த அதிரடியாக மாடு வளர்ப்பவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் மாடுகளுக்கு உரிமம் பெற வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 2024ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரில் 22,875 மாடுகள் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் தற்போது அவை 25 ஆயிரம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இதில் பல மாடுகள் சாலைகளிலும் பொது இடங்களிலும் சுற்றித்திரிவதால் போக்குவரத்து மற்றும் பொதுச் சுகாதார பிரச்சினைகள் உருவாகி வருகின்றன.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 4,237 மாடுகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2.22 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நகரில் மாடுகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் உரிமம் பெற்று மைக்ரோசிப் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரை சுமார் 750 மாடுகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 45 நாட்கள் வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் 18ஆம் தேதியுடன் முடிவடைவதால், அதற்குள் உரிமம் பெறாதவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!