undefined

வேலை தேடுபவர்களே உஷார்... ரூ.1.50 கோடி மோசடி... 130 பேரை ஏமாற்றிய போலி ஏஜென்ட் கைது!

 

கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரத்தில் தனியார் ஏஜென்சி நடத்தி வந்த நபர், துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பறித்த புகாரில் சிக்கியுள்ளார்.

கன்னியாகுமரி மாதவபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (31) என்பவர், வெளிநாட்டு வேலைக்காக இளைஞர்களைக் குறிவைத்துள்ளார். துபாயில் உள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி, தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை 130 பேரிடம் பணம் வசூலித்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட சந்தோஷ், பலருக்கு வேலை வாங்கித் தராமலும், சிலரை 'விசிட்டிங் விசா'வில்  அனுப்பி ஏமாற்றியதும் விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலினிடம் அளித்த புகாரின் பேரில், மதுரையில் பதுங்கியிருந்த சந்தோஷைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

இந்த மோசடி தொடர்பாகக் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்: இந்த ஏஜென்சி மூலம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், மாவட்டக் குற்றப்பிரிவில் நேரடியாகவோ அல்லது 94981 96976 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பின் உண்மைத் தன்மை குறித்துச் சந்தேகம் இருந்தால் 70103 63173 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இதுபோன்ற மோசடிகளில் தொடர்ந்து ஈடுபடுபவர்கள் மீது 'குண்டர் தடுப்புச் சட்டத்தின்' கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலை தேடும் இளைஞர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், போலி வாக்குறுதிகளை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!