undefined

உஷார்.. இன்று முதல் திடீர் மழை... துளைத்தெடுக்கும் குளிர்... வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் தினமான நேற்று சென்னையில் பெய்த மழையும், தற்போதைய கடும் குளிரும் பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் பகிர்ந்துள்ள சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள தகவலின்படி, கடந்த 25 ஆண்டுகளில், சென்னையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மழை பெய்யும் நிகழ்வு இது 5-வது முறையாகும் (ஏற்கனவே 2001, 2003, 2022 மற்றும் 2024-ல் பெய்துள்ளது). நேற்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான தூறல் மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், இது முந்தைய ஆண்டுகளைப் போலத் தீவிரமாக இல்லை.

தமிழகத்தின் மலைப்பிரதேசங்களில் வெப்பநிலை மிகக் கடுமையாகக் குறைந்து பனிமூட்டம் நிலவி வருகிறது. ஊட்டியில் 5.4 டிகிரி செல்சியஸ் (மிகக்குறைந்த வெப்பநிலை) கொடைக்கானலில் 7.2 டிகிரி செல்சியஸ், குன்னூர் பகுதிகளில் 7.4 டிகிரி செல்சியஸ், ஏற்காடு மலை பகுதியில் 9 டிகிரி செல்சியஸ். மலைப்பிரதேசங்கள் மட்டுமன்றி ஆந்திராவின் அரக்கு (8°C) மற்றும் கர்நாடகாவின் ஹாசன் (8.1°C) பகுதிகளிலும் கடும் குளிர் நிலவுகிறது.

தெற்கு கேரளா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக: இன்று (டிசம்பர் 26): தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிசம்பர் 27 முதல் 31 வரை: தென்கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையில் இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையைப் பொறுத்தவரை அதிகபட்சம் 29°C மற்றும் குறைந்தபட்சம் 22°C ஆக இருக்கும்.

அடுத்த சில நாட்களுக்கு அதிகாலை வேளையில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!