உஷார்... காணும் பொங்கல்- நாளை இந்த பகுதிகளில் எல்லாம் போக்குவரத்து மாற்றம்!
காணும் பொங்கலையொட்டி மெரினா காமராஜர் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள்:
பாரிமுனை - காந்தி சிலை: பாரிமுனையிலிருந்து காந்தி சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்துகள் தவிர), போர் நினைவுச் சின்னம் அருகே திருப்பி விடப்பட்டு, கொடி மர இல்ல சாலை, அண்ணா சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
உழைப்பாளர் சிலை சந்திப்பு: உழைப்பாளர் சிலை முதல் கண்ணகி சிலை வரையிலான சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்படும். மாநகர பேருந்துகள் உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை நோக்கித் திரும்ப அனுமதி இல்லை.
கண்ணகி சிலை - அண்ணா சாலை: உழைப்பாளர் சிலை நோக்கிச் செல்லும் பேருந்துகள், கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலை, பெல்ஸ் சாலை வழியாக அண்ணா சிலையை அடையத் திருப்பி விடப்படும்.
காந்தி சிலை - கண்ணகி சிலை: காந்தி சிலையிலிருந்து கண்ணகி சிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது. இவை ஆர்.கே. சாலை, மியூசிக் அகாடமி மற்றும் அண்ணா சாலை வழியாகத் திருப்பி விடப்படும்.
ஒருவழிப் பாதைகள்: விக்டோரியா ஹாஸ்டல் சாலை மற்றும் பெல்ஸ் சாலை ஆகியவை பாரதி சாலை சந்திப்பிலிருந்து ஒருவழிப் பாதையாகச் செயல்படும்.
வாகன நிறுத்தங்கள்: சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த சென்னை பல்கலைக்கழக வளாகம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் பொதுப்பணி துறை மைதானம், இராணி மேரி மகளிர் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி வளாகம், லேடி வெலிங்டன் பள்ளி, எம்.ஆர்.டி.எஸ் சேப்பாக்கம், சீனிவாசபுரம் லூப் சாலை (பேருந்துகளுக்கு மட்டும்) ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!