நாடு முழுவதும் பாரத் பந்த்: இன்று எவையெல்லாம் இயங்கும்? எவையெல்லாம் முடங்கும்?
மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா போன்ற விவசாய அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்தின் பின்னணியில் உள்ள 10 அம்சக் கோரிக்கைகளில் முக்கியமானவை: அனைத்துப் பயிர்களுக்கும் சட்டப்பூர்வமான குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும். புதிய தொழிலாளர் சட்டக் குறியீடுகளை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை நாட்களை 200 ஆக உயர்த்த வேண்டும் மற்றும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ. 26,000 நிர்ணயிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
யார் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள்?
ஐஎன்டியுசி (INTUC), ஏஐடியுசி (AITUC), சிஐடியுசி (CITU) உள்ளிட்ட பல்வேறு மத்தியத் தொழிற்சங்கங்கள். சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள். சில மாநிலங்களில் போக்குவரத்துத் துறை ஊழியர்களும், வங்கி ஊழியர் சங்கங்களும் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எவை பாதிக்கப்படலாம்?
கேரளாவிலும், வட மாநிலங்களின் சில பகுதிகளிலும் பேருந்து மற்றும் லாரி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடலாம்.
ஊழியர் சங்கங்கள் பங்கேற்பதால் இன்று வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும். கிராமப்புறங்களில் விவசாய வேலைகள் மற்றும் சந்தைகளுக்குப் பயிர்களைக் கொண்டு செல்லும் பணிகள் நிறுத்தப்படலாம்.
எவை வழக்கம்போல இயங்கும்?
பால் விநியோகம், ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள் வழக்கம்போலச் செயல்படும். தேர்வுகள் மற்றும் வழக்கமான வகுப்புகள் பெரும்பாலும் பாதிக்கப்படாது எனத் தெரிகிறது.
ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து பெரும்பாலும் தடையின்றி இயங்கும், எனினும் நிலையங்களுக்குச் செல்வதற்கான உள்ளூர் போக்குவரத்து நெரிசல் இருக்கலாம்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!