பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்... வீரர்கள் இரங்கல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி. துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 177 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை எடுத்தார். அவர் 1202 ரன்கள் எடுத்தார், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 104 ரன்கள் எடுத்தார்.
கடந்த 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்த சலீம் துரானி இந்திய டெஸ்ட் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார். இடது கை ஆட்டக்காரரான அவர், 25 வயதில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
சலீம் துரானி தனது இளைய சகோதரர் ஜஹாங்கீர் துராணியுடன் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், வயது மூப்பின் காரணமாகவும்,உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் இன்று காலமானார். அவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரவிசாஸ்திரி, விவிஎஸ் லஷ்மண் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!