undefined

சான்ட்ராவுக்காக களமிறங்கிய ப்ரஜின்… பிக் பாஸ் வீட்டில் கொந்தளிப்பு!

 
 

 

பிக் பாஸ் சீசன் 9-ல் நடிகை சான்ட்ரா தனது வாழ்க்கைப் பாதையை உருக்கமாக பகிர்ந்தது விவாதமாக மாறியுள்ளது. அந்த நேரத்தில் சில போட்டியாளர்கள் சிரித்தும் அலட்சியமாக நடந்துகொண்டதும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர் ப்ரஜின் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

சான்ட்ரா பேசிக்கொண்டிருக்கும்போதே சுபிக்‌ஷா, ஆதிரை உள்ளிட்டோர் ஓய்வறைக்குச் சென்று சிரித்தது மிகக் கீழ்த்தரமான செயல் என ப்ரஜின் சாடினார். இரவில் பலர் ஒன்றாக அமர்ந்து கிசுகிசுத்து சிரித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதைவிட மோசமாக நடந்துகொள்ள முடியாது என்றும் ப்ரஜின் தெரிவித்தார்.

ஆனால், ப்ரஜினின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு ரசிகர்கள் எதிர்வினை தெரிவித்துள்ளனர். சான்ட்ராவின் கதையை கேலி செய்யவில்லை என்றும், விக்ரம் தூங்கியதைப் பற்றியே சிரிப்பு வந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் பிக் பாஸ் வீட்டின் உள்ளும் வெளியும் விவாதம் சூடுபிடித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!