undefined

ஷில்பா ஷெட்டியின் சொகுசு விடுதியில் பிக்பாஸ் பிரபலம் ரகளை!

 

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில், கர்நாடக பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் தொழிலதிபருமான சத்யா நாயுடு தனது நண்பர்களுடன் இணைந்து, விடுதி ஊழியர்களுடன் கட்டண ரசீது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த வீடியோச் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், காவல்துறை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

பெங்களூரு டிரினிட்டி சர்க்கிள் செயின்ட் மார்க்ஸ் சாலையில் அமைந்துள்ள 'பாஸ்டியன் பப்' என்ற கேளிக்கை விடுதியே இந்தச் சம்பவத்தின் மையமாகும். இது நடிகை ஷில்பா ஷெட்டிக்குச் சொந்தமானது. கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவில், கர்நாடக பிக்பாஸ் முன்னாள் போட்டியாளரும் தொழிலதிபருமான சத்யா நாயுடு, தனது நண்பர்களுடன் இந்தக் கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளார்.

அப்போது, அவருக்கும் அவரது நண்பர்களுக்கும் வழங்கப்பட்ட கட்டண ரசீதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் விடுதியின் ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிக் கடுமையாகத் தகராறு செய்துள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் ஊழியர்களைத் தாக்க முயன்று ரகளையிலும் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு துணைப் போலீஸ் கமிஷனர் உடனடியாக இந்தச் சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படிச் சத்யா நாயுடு, அவரது நண்பர்கள் மற்றும் கேளிக்கை விடுதி ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!