பீகாரில் ஏழுமலையான் கோவில் - திருப்பதி தேவஸ்தானத்துக்கு 10 ஏக்கர் நிலம் வழங்கியது அரசு!
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்டுவதற்காக, பீகார் மாநில அரசு 10.11 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. பீகார் அரசின் இந்த முயற்சிக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னா மாவட்டம், மொகாமா காஸ் பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10.11 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் 99 ஆண்டுகள் காலத்துக்கு, ஆண்டுக்கு ரூ.1 வாடகையில் தேவஸ்தானத்துக்கு வழங்கப்படும் என்று பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது. கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்கிய பீகார் மாநில அரசுக்கு ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநில அமைச்சர் லோகேஷ் மற்றும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அவர்கள், பாட்னா மாவட்டத்தில் கோவில் கட்டுவதற்கு அனுமதி கிடைத்திருப்பது மகிழ்ச்சிகரமான முன்னேற்றம் என்றும், விரைவில் பீகார் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழக இயக்குனருடன் ஆலோசனைகள் நடத்தி, கோவில் கட்டுமானத்துக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!