சென்னையில் 2வயது குழந்தை உட்பட தொழிலாளர் குடும்பம் கொலை ... 3 வது நாளில் சடலம் மீட்பு!
Jan 30, 2026, 12:56 IST
சென்னை தரமணி பகுதியில், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி கௌரவ்குமார் (24), அவரது மனைவி முனிதா குமாரி (21), 2 வயது மகன் பிர்மணி குமார் ஆகியோர் கடந்த 25-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். கௌரவ்குமார் குடும்பத்திற்கு சென்னையில் அடைக்கலம் அளித்தவர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை (ஜனவரி 30), பெருங்குடி குப்பைக் கிடங்கில் முனிதா குமாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவல் துறையினர் மேலும் 2 பேரை விசாரணைக்காக கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!