பைக்கில் சென்ற தந்தை–மகன் பலி… சாலை விபத்தில் சோகம்!
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரியாபட்டி நான்கு வழிச்சாலையில் சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்து அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் பைக்கில் சென்ற தந்தை அழகுமலை (65) மற்றும் மகன் முனுசாமி (33) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் மோதிய வேகத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!