பைக் பால்வண்டியில் மோதி கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் பலி!
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் பாரதி (20) கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவரது நண்பர் மோகன் (20) பிகாம் மூன்றாம் ஆண்டு மாணவர். நேற்று இரவு இருவரும் புதிய மோட்டார் சைக்கிளில் நங்கவள்ளியிலிருந்து எடப்பாடி நோக்கி அதிவேகமாக சென்றனர். பாப்பாத்தி காடு அருகே சென்றபோது எதிரே வந்த பால் வண்டி மீது பைக் நேருக்கு நேர் மோதியது.
இந்த கோர விபத்தில் பைக்கில் வந்த சஞ்சய் பாரதி மற்றும் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதேபோல் பால் வண்டியில் பயணம் செய்த மேச்சேரி செட்டிகாரச்சியூரை சேர்ந்த விமல்ராஜ் (20) என்பவரும் பலியாகினார். விபத்து நடந்த இடமே சோகக் காட்சியாக மாறியது.
பால் வண்டியில் இருந்த ராமகிருஷ்ணன் (21) பலத்த காயங்களுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வண்டி ஓட்டுநர் விஜயராகவன் (18) லேசான காயத்துடன் தப்பினார். உயிரிழந்த மூவரின் உடல்களும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நங்கவள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!