undefined

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில்  பைக் ரேஸ்…  துரத்தி அடித்த பொதுமக்கள்!

 
 

 

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குமரி மாவட்டம் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் கருங்கல் ஆலஞ்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 25க்கும் மேற்பட்ட பைக்குகளில் வாலிபர்கள் திரண்டு, திடீரென பைக் ரேஸில் ஈடுபட்டனர். சாலையை மறித்து வீலிங் செய்து அதிக சத்தம் எழுப்பியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதை கண்டித்த தொழிலாளரின் பேச்சை பொருட்படுத்தாத வாலிபர்கள் மீண்டும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ரேஸில் ஈடுபட்ட வாலிபர்களை கம்புகளுடன் துரத்தி அடித்தனர். சிலர் அடி வாங்கியபடியே பைக்குகளில் தப்பினர். தகவல் அறிந்து சென்ற அதிரடி படையினர் வாலிபர்களை பிடிக்க முயன்றபோது, ஒரு பைக் காவலர் அருள்ராஜ் (36) மீது மோதியது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதே நேரத்தில் குலசேகரம் இட்டகவேலி பொன்னாவரவிளை பகுதியை சேர்ந்த ரெஜின் ஜாஸ்பின் (34), குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் கொண்டாட குளச்சல் அருகே மிடாலம் பகுதியில் கடலில் இறங்கினார். படகிலிருந்து கரை ஏறும்போது நிலை தடுமாறி கடலில் விழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பண்டிகை நாளில் நடந்த இந்த தொடர் சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!