undefined

 கிறிஸ்துமஸ் நாளில்  ரேஸில் ஈடுபட்ட பைக்குகள் பறிமுதல்... காவல்துறை  அதிரடி!

 
 

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் 8 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நகரில் உள்ள பிரபலமான 350 தேவாலயங்களை சுற்றி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டில் ஈடுபடுவோரை பிடிக்க சாதாரண உடையில் போலீஸாரும் களத்தில் இறங்கினர்.

அதிவேக வாகன ஓட்டம் மற்றும் வாகன பந்தயங்களில் ஈடுபடுவோருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈசிஆர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நேற்று முன்தினம் இரவு சிலர் வாகன பந்தயங்களில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போக்குவரத்து போலீஸார், அதிவேகமாக ஓட்டப்பட்ட மற்றும் பந்தயத்தில் பயன்படுத்தப்பட்ட 24 பைக்குகளை பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்களை ஓட்டிய இளைஞர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!