பறவை காய்ச்சல்... கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழிகள், முட்டைகள் கொண்டு வர அதிரடித் தடை!
கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ள நிலையில், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
கேரளாவில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழித் தீவனங்கள் மற்றும் கோழி எச்சங்கள் ஆகியவற்றை வாகனங்களில் நீலகிரிக்குக் கொண்டு வர தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள எல்லையில் 7 இடங்களிலும், கர்நாடக எல்லையில் 1 இடத்திலும் என மொத்தம் 8 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், காவல்துறை மற்றும் வனத்துறையினருடன் இணைந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், பண்ணையாளர்கள் பின்வரும் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்: கோழி, வாத்து மற்றும் வான்கோழிகளை ஒரே பண்ணையில் வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பண்ணை உபகரணங்களை மாதம் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பண்ணைகளில் கோழிகள் மர்மமான முறையில் இறந்தால், உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். வலசை வரும் வனப்பறவைகள் பண்ணைக்குள் நுழையாதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!