கேரளாவில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பீதி… ஆயிரக்கணக்கான வாத்துகள் பலி!
ஆலப்புழா மாவட்டத்தில் எட்டு வார்டுகளிலும், கோட்டயம் மாவட்டத்தில் மூன்று வார்டுகளிலும் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத் துறை அவசரகால கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. குட்டநாடு பகுதியில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கால்நடை பராமரிப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நெடுமுடி, செருதானை, கருவாட்டா, கார்த்திகைப்பள்ளி, அம்பலபுழா தெற்கு, புன்னப்பிரா தெற்கு, தகழி உள்ளிட்ட பகுதிகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இறப்புக்கு முன் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
திருவல்லா ஆய்வகத்தில் மேற்கொண்ட ஆரம்ப சோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் போபாலில் உள்ள விலங்கு நோய் ஆய்வகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!