சண்டீகர் மேயர் தேர்தல்… பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி வெற்றி!
சண்டீகர் மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மும்முனைப் போட்டியில் அவர் 18 வாக்குகளை பெற்றார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் யோகேஷ் திங்ரா 11 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் குருபிரீத் சிங் கபி 7 வாக்குகளும் பெற்றனர்.
இந்த முறை ரகசிய வாக்கெடுப்பு முறை கைவிடப்பட்டு, கைகளை உயர்த்தி வாக்களிக்கும் முறையில் தேர்தல் நடைபெற்றது. கவுன்சிலர்கள் கையை உயர்த்திய பின்னர், தங்களது முடிவை வாய்மொழியாக உறுதிப்படுத்தினர். நியமனக் கவுன்சிலர் ரம்னீக் சிங் தேர்தலுக்கான தலைமை அதிகாரியாக செயல்பட்டார்.
35 உறுப்பினர்களைக் கொண்ட மாநகராட்சியில் பாஜகவுக்கு 18, ஆம் ஆத்மி கட்சிக்கு 11, காங்கிரஸுக்கு 6 கவுன்சிலர்கள் உள்ளனர். சண்டீகர் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, தனது கட்சி வேட்பாளர் குருபிரீத் சிங் கபிக்கு ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!