பாஜக எம்.எல்.ஏ ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் , களவுமாக பிடிபட்டார்!
கர்நாடக மாநிலத்தில் பாஜக எம்.எல்.ஏ. சந்துரு லாமெனி ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக்ஆயுக்தா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இன்று கதக் லோக்ஆயுக்தா காவல் நிலையம் நடத்திய பொறி நடவடிக்கையில் அவர் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுபாசனத் துறையின் கீழ் சாலை ஓரம் தடுப்புச் சுவர் கட்டும் பணிக்காக ரூ.11 லட்சம் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சின்சாலி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் அடிப்படையில் கர்நாடகா கதக் லோக்ஆயுக்தா இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
ஷிரஹட்டி தொகுதி எம்.எல்.ஏவுடன் அவரது தனி உதவியாளர்கள் மஞ்சுநாத் வால்மீகி மற்றும் குரு நாயக் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!