பதவியேற்றதும் எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு... பாஜக தலைவர் நிதின் நவீன் பளிச்!
பாஜகவின் புதிய தேசிய தலைவராக நிதின் நவீன் இன்று தில்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம் முடிந்த நிலையில் நடைபெற்ற தேர்தலில், நிதின் நவீன் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வானார். ஐந்து முறை பிகார் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த இவர், பாஜகவின் மிகவும் இளம் தேசிய தலைவர் ஆவார்.
பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நிதின் நவீன், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தை குறிப்பிட்டார். அந்த வழக்கில் நீதிபதியையே பதவி நீக்க முயற்சி நடப்பதாக கூறி, எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார்.
“எதிர்க்கட்சிகள் இந்துக்களின் பாரம்பரியத்திற்கு எதிராக செயல்படுகின்றன” என அவர் குற்றம்சாட்டினார். மேற்கு வங்கம், கேரளம், தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சனாதன எதிர்ப்பு சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்றும், இளைஞர்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!