undefined

மகாராஷ்ட்ரா  மாநகராட்சி தேர்தலில்  பாஜக 66 இடங்களில் போட்டியின்றி தேர்வு!

 

மும்பை உள்பட மராட்டியம் முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் 30-ம் தேதி முடிந்தது. வேட்பு மனு திரும்ப பெற நேற்று கடைசி நாளாக இருந்தது.

இந்த நிலையில் பல இடங்களில் ஆளும் கட்சி வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாயுதி கூட்டணியை சேர்ந்த 66 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளதாக பா.ஜனதா மூத்த தலைவர் கேசவ் உபாத்யே தெரிவித்தார். இதில் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் மட்டும் 44 பேர் என கூறப்பட்டுள்ளது.

கல்யாண்-டோம்பிவிலி, பன்வெல், பிவண்டி, புனே, நாக்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. வேட்பு மனு திரும்ப பெற அழுத்தம், மிரட்டல், ஆசைவார்த்தைகள் கூறப்பட்டதா என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!