undefined

பாஜக இளைஞரணி நிர்வாகி தற்கொலை... கடன் தவணை கட்ட தவறியதால் வங்கி ஊழியர்கள் மிரட்டலால் விபரீதம்!  

 
 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பர்மா நகர் பகுதியை சேர்ந்தவர் அரி (35). கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவர், பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலைவராக இருந்தார். அரிக்கு சுபலட்சுமி என்ற மனைவி மற்றும் 2 வயது, 1 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். மனைவி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அரி வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில், வீட்டின் கதவை உள்ளிருந்து பூட்டி அரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது உறவினர்களுக்கு தெரிய வந்தது. முதலில் காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் அவரது உடலை வீட்டில் வைத்திருந்தனர். பின்னர் அவரது கையில் ஒரு அலைபேசி எண் எழுதப்பட்டிருந்ததை உறவினர்கள் கவனித்தனர். தொடர்ந்து அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகன கடன் தவணை தொடர்பாக தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அரி தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தனியார் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!