பாஜகவின் 'ICE' வியூகம்.. ஓபிஎஸ் கூட்டணி குறித்து கனிமொழி பேட்டி!
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 76 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை வழங்கிய பிறகு கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசியது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
"தேர்தல் நெருங்கிவிட்டாலே பாஜக தனது 'ICE' (Income Tax, CBI, ED) வியூகத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிடும். அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது தமிழகத்திலும் அந்த வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதும் இதன் தொடர்ச்சிதான்" என்றவர், திமுக கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்காக உருவானது அல்ல, அது கொள்கை ரீதியான கூட்டணி. நீண்டகால உறவு என்பதால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் எந்தப் பிரச்சனையும் இன்றி சுமுகமாக முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து எழும் கேள்விகளுக்கு, "இது தொடர்பான ஏதேனும் தகவல்கள் இருந்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்" என்று கூறினார்.
திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணிகள் குறித்துக் கேட்டபோது, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இருப்பதாகவும், அவை முடிந்தவுடன் விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!