அடி தூள்... ஐபிஎல் டிக்கெட்டை காட்டினால் மெட்ரோவில் இலவச பயணம்!
18வது சீசன் ஐபிஎல் போட்டி தொடரில் இன்று ஏப்ரல் 5ம் தேதி சென்னை டெல்லி அணிகள் மோத உள்ளன. தொடர் தோல்வியை சந்தித்து வரும் சிஎஸ்கே இந்த போட்டியிலாவது ஜெயிக்காதா என ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். டெல்லி அணி ஏற்கனவே அடுத்தடுத்து 2 வெற்றிகளை கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய போட்டிகள் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிகஅருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ள “IPL 2025” கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
அதன்படி IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்தசிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம். அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமானநிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ இரயில் 23:27 மணிக்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரயில் 22:59 மணிக்கும் மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்திற்குசெல்லும் கடைசி இணைப்பு இரயில் 22:44 மணிக்கும் புறப்படும். புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற் குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளும்படி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!