அடி தூள்... 2 ஐபிஎல் டிக்கெட் வாங்கினால் ஜெர்சி இலவசம்... ரசிகர்கள் ஆர்வம்!
மிகப் பெரிய கிரிக்கெட் கொண்டாட்டத்திற்கு நாடு தயாராகி வருகிறது. மார்ச் 22ம் தேதி ஐபிஎல் 18வது சீசன் தொடங்க உள்ள நிலையில் இப்போதில் இருந்தே கோப்பையை வெல்லப் போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
இந்நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும் சன்ரைசர்ஸ் அணியின் ஹோம் போட்டிகளை காண வரும் ரசிகர்கள் , ஒருவர் 2 டிக்கெட்டுகளை வாங்கினால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஜெர்சி ஒன்று இலவசமாக வழங்கப்படும் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளது.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான வலைதள முகவரியையும் அந்த அணி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இந்த செய்தியையும் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு நான் நீ என டிக்கெட்டுகளை வாங்கி ஜெர்சிகளை வாங்கி செல்கின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!