இந்தியாவில் பிஎம்டபிள்யூ புதிய எக்ஸ்3 கார் அறிமுகம்… !
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ, புதிய எக்ஸ்3 30 எக்ஸ் எம் ஸ்போர்ட்ஸ் புரோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய மாடல் பிப்ரவரி 16ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிக திறன் கொண்ட இன்ஜின் காரணமாக இந்த கார் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காரில் 2 லிட்டர் ட்வின் டர்போ 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 258 எச்பி பவரை வழங்கும் திறன் கொண்டது. 48 வோல்ட் மைல்டு ஹைபிரிட் சிஸ்டம் மற்றும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த கார் 6.3 விநாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகும். மேலும், லிட்டருக்கு 14.61 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திய சந்தையில் உள்ள எக்ஸ்3 காரில் இரண்டு வேரியண்ட்கள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள இன்ஜின் 197 எச்பி திறனை வழங்குகிறது. இதனை விட அதிக திறன் மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் புதிய எக்ஸ்3 30 எக்ஸ் எம் ஸ்போர்ட்ஸ் புரோ மாடல் வருவதால், ஆடம்பர கார் சந்தையில் போட்டி அதிகரிக்கும் என நிறுவனம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!