பிளஸ் 2 பொதுத் தேர்வு: மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எண்ணுடன் இணையத்தில் வெளியீடு!
தமிழகத்தில் நடப்பிக்கும் இந்த கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர் பட்டியல் தமிழக அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்குநர் க. சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் தேர்வுத் துறை உதவி இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் பெயர் பட்டியலை அரசு தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் (அனைவரும்) வியாழக்கிழமை, ஜனவரி 22 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூஸர் ஐ.டி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்த வேண்டும். பிளஸ் 1 அரியர் பெயர் பட்டியலை ஜனவரி 24 (சனிக்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 2 முதல் 26 வரை நடைபெறுகிறது. இதற்குமுன், செய்முறைத் தேர்வுகள் பிப். 9-ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும் தேர்வுத் துறை குறிப்பிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!