undefined

 உறையும் கடலில் கவிழ்ந்த படகு… பிரபல கேப்டனின் கடைசி குரல்...  வைரல் வீடியோ! 

 
 

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற பிரபல தொலைக்காட்சி நட்சத்திரம் கேப்டன் கஸ் சான்பிலிப்போ மற்றும் அவரது குழுவினர் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடும் குளிரும், உறையும் கடல் நீரும் இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. படகிலிருந்து எந்தவித அபாய சிக்னலும் வராததால் விபத்து தாமதமாக தெரிய வந்தது.

தகவல் கிடைத்ததும் கடலோரக் காவல்படையினர் சுமார் 1000 சதுர மைல் பரப்பளவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் ஒருவரின் உடல் மட்டுமே மீட்கப்பட்டது. மற்றவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது தேடுதல் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கு முன்பு, “குளிர் தாங்க முடியவில்லை, நான் வேலையை விட்டுவிடப் போகிறேன்” என்று கேப்டன் நண்பரிடம் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 2012-ஆம் ஆண்டு ஹிஸ்டரி சேனலில் ஒளிபரப்பான ‘நார்-ஈஸ்டர் மென்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர்களின் மரணம் க்ளௌசெஸ்டர் மீனவ சமூகத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!