பொங்கலுக்கு கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் படகு சேவை நேரம் 3 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 15, 16, 17 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு ஏற்பாடு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கும் படகு சேவை, பொங்கல் நாட்களில் காலை 6 மணிக்கே தொடங்கும். அதேபோல், மாலை 4 மணிக்கு நிறைவடையும் சேவை, மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களை பார்வையிடும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த நேர நீட்டிப்பு பெரிதும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளும் கூடுதலாக செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!