3 நாட்களாக காருக்குள் கிடந்த சடலம்... பெரும் பரபரப்பு!
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார், காருக்குள் உயிரிழந்து கிடந்த நபரின் உடலை மீட்டனர். விசாரணையில் அவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயதுரை என்பதும், கடந்த மூன்று மாதங்களாக ஊபர் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்ததும் போலீசாருக்குத் தெரியவந்தது.
கடந்த மூன்று நாட்களாக ஜெயதுரை வேலைக்கு வராததாலும், போன் எடுக்காததாலும் சந்தேகமடைந்த ஊபர் நிறுவனம் ஜிபிஆர்எஸ் கருவி மூலம் காரின் இருப்பிடத்தைக் கண்டறிந்தது. தைலாவரம் பகுதியில் கார் நிற்பதைக் கண்டு அங்கு வந்து பார்த்தபோதுதான், ஜெயதுரை காரிலேயே சடலமாகத் துர்நாற்றம் வீசிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் இறந்து மூன்று நாட்கள் ஆகலாம் எனத் தெரிவித்துள்ள போலீசார், அவரது காலில் இருந்த ரத்தக் காயத்தைக் கண்டு இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த ஜெயதுரைக்கு மது அருந்தும் பழக்கம் அதிகம் இருந்ததாகவும், அவர் சரியாக உணவு உட்கொள்வதில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உடலில் காயங்கள் இருப்பதால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சந்தேகிக்கும் போலீசார், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!