undefined

பகீர்...  பிரியாணி கடை ஃப்ரீஸரில் இளைஞர் உடல்!  

 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌ அருகே பக்சி கா தாளாப் பகுதியில் மூடப்பட்டிருந்த சைவ பிரியாணி கடையின் ஃப்ரீஸரில் 35 வயது மதிக்கத்தக்க நபரின் உடல் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பினர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், பலியானவர் விஜய் பால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கிஷண் பூர் மஜ்ரா பகுதியில் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. தினக்கூலி வேலை செய்து வந்த அவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடை உரிமையாளர் ஷானி ராவத், தந்தை மரணம் காரணமாக கடந்த நான்கு நாட்களாக கடை திறக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை கடையை திறந்த போது ஃப்ரீஸரில் உடல் இருப்பதை கண்டு போலீசாருக்கு தகவல் அளித்ததாக கூறியுள்ளார். மரணத்திற்கான துல்லிய காரணம் உடல் கூராய்வுக்குப் பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!