undefined

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு.. மின் உற்பத்தி திடீர் முடக்கம்!

 

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் அமைந்துள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில், இரண்டாம் யூனிட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் யூனிட்டில் உள்ள 2-வது அலகில் (Unit 2 - Stage 2) திடீரென கொதிகலன் (Boiler) குழாயில் கசிவு ஏற்பட்டது. இந்தக் கசிவு காரணமாக, அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 600 மெகாவாட் மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பழுதைச் சரிசெய்யும் பணியில் மின்வாரியப் பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெப்பம் குறைந்த பிறகுதான் குழாய் கசிவை முழுமையாகச் சரிசெய்ய முடியும் என்பதால், உற்பத்தி சீராகச் சில மணிநேரங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் மின் உற்பத்தி நடைபெறுகிறது: முதல் நிலை 3 அலகுகள் - தலா 210 மெகாவாட் (மொத்தம் 630 MW). இரண்டாம் நிலை 2 அலகுகள் - தலா 600 மெகாவாட் (மொத்தம் 1200 MW). தற்போது இரண்டாம் நிலையில் உள்ள ஒரு அலகில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற அலகுகளில் உற்பத்தி வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!