undefined

பலூசிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்!

 

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் பிற மாகாணங்களுடன் பலூசிஸ்தானை இணைக்கும் இந்த முக்கிய ரயில் பாதையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி தாக்குதல் நடந்துள்ளது.

தெரா முராத் ஜமாலி பகுதியில் உள்ள தண்டவாளத்தில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ரயில் சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டு, தாக்குதல் நடந்த பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். சேதமடைந்த தண்டவாளப் பகுதிகள் பின்னர் சீரமைக்கப்பட்டன.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பலூசிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏற்கெனவே பலமுறை வெடிகுண்டு தாக்குதல்களால் ரயில் கவிழ்க்கப்பட்டதும், 2025ஆம் ஆண்டு 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் சிறைப்பிடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!