undefined

பகீர்.. வேலைக் கொடுக்காததால்.. பெட்ரோல் பங்க் மீது குண்டு வீசிய இளைஞர்.. தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு!

 

பலமுறை கேட்டும் வேலை கொடுக்காததால் இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்க் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்கிற்கு இரவு நேரத்தில் வந்த இளைஞர் ஒருவர், தயாராக கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை திடீரென பங்க் மீது வீசி எறிந்தார். பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியதால் அதிர்ச்சி அடைந்த அடுத்து ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.

இதனால் அங்கு தீப்பிடித்து எரித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. எனினும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டை வீசிய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனையடுத்து காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கு விரைந்துவந்த போலீசார், விசாரணை நடத்தினர். மேலும் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை தேடி வந்தனர். அதன்படி பரமக்குடி அரசு ஐ.டி.ஐ. எதிரே வசித்து வரும் கணேசன் (35) என்பது தெரிய வந்தது. உடனடியாத அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த இளைஞர் பலமுறை அந்த பெட்ரோல் பங்கில் சென்று வேலை கேட்டதாகவும், ஆனால் அவர்கள் வேலை கொடுக்காததால் ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து அவரை சிறையில் அடைத்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்!