ஒரே நேரத்தில் 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... ஒடிசாவில் பரபரப்பு!
ஒடிசா மாநிலத்தில் ஒரே நேரத்தில் சம்பால்பூர், தியோகார் மற்றும் கட்டாக் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெடிகுண்டு மிரட்டல் ஒடியா மொழியில் மின்ன்சஞ்சலில் அனுப்பப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றங்களில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கண்டுபிடிக்கப்படாததால், அதிகாரிகள் இந்த மிரட்டல்கள் போலியானவை என்று உறுதி செய்துள்ளனர். கட்டாக்கில் உள்ள ஒரிசா உயர் நீதிமன்றத்திலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் முன்னெச்சரிக்கையாக சோதனைகள் மேற்கொண்டனர்.
இந்த காரணமாக, நீதிமன்ற பணிகள் சில மணி நேரங்களுக்கு முடங்கியது. ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய விசாரணை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!