undefined

 பள்ளிகளில் வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம், பரபரப்பு

 
 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சுமார் 10 பள்ளிக்கூடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இன்று (டிச.17) அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில், பள்ளிகளில் பொருத்தப்பட்டுள்ள வெடிகுண்டுகள் மதியம் 1.11 மணிக்கு வெடிக்கும் எனக் கூறப்பட்டது. இதனால் நகரில் திடீர் பதற்றம் ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மதிய வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தகவலறிந்து காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். மோப்ப நாய்களின் உதவியுடன் பள்ளி கட்டடங்கள் முழுவதும் தீவிர சோதனை நடைபெற்றது.

சோதனையில் எந்தவொரு சந்தேகப் பொருளும் கிடைக்கவில்லை. இதையடுத்து மிரட்டல்கள் போலியானவை என உறுதி செய்யப்பட்டது. சம்பவம் குறித்து காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மின்னஞ்சல் அனுப்பிய நபரை கண்டறிய சைபர் கிரைம் அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக இதுபோன்ற போலி மிரட்டல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!