சட்டமன்றம், உயர்நீதிமன்றம் உட்பட முக்கிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்... மும்பையில் பெரும் பரபரப்பு!
மும்பையில் உள்ள விதான் பவன் மற்றும் மும்பை உயர்நீதிமன்றம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்த மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல் தகவல் கிடைத்ததும் சட்டமன்ற வளாகத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து காவல்துறையினர் வளாகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் மும்பை உயர்நீதிமன்றத்திலும் பாதுகாப்பு அதிகாரிகள் விரிவான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சட்டமன்றக் குழுத் தலைவர் ராம் ஷிண்டே கூறுகையில், விதான் பவன், உயர்நீதிமன்றம், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு வங்கி உள்ளிட்ட பல இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தெரிவித்தார். பாதுகாப்பு சோதனைகள் முடிந்த பிறகு இரு அவைகளின் செயல்பாடுகளும் வழக்கம்போல் தொடரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!