20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்… பெற்றோர் மத்தியில் பரபரப்பு!
நொய்டாவில் உள்ள சுமார் 20 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி, நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு இதுபோன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வந்துவருவது குறிப்பிடத்தக்கது.
மிரட்டல் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடங்களுக்கு விரைந்தனர். வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்ப் படையினர் பள்ளி வளாகங்களில் தீவிர சோதனை நடத்தினர். பாதுகாப்பு காரணமாக சில பள்ளிகளில் மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதுவரை எந்தவித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. மின்னஞ்சல் அனுப்பியவர்களை கண்டறிய சைபர் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு மின்னஞ்சல் வெளிநாட்டு முகவரியிலிருந்து வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என பெற்றோருக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!